Thursday, 6 July 2017

Bootable CD/DVD உருவாக்குவது நீங்கள் நினைப்பதை விட எளிது

1. உங்களிடம் உள்ள ஒரு CD/DVD யை எவ்வாறு ஒரு ISO/NRG இமேஜ் கோப்பாக காப்பி செய்து வைப்பது.
2. நீங்கள் ஏற்கனவே ஒரு விண்டோஸ் CDயை உங்களின் கணினியில் காப்பி செய்து வைத்து இருந்தால் அந்த கோப்புகளை எவ்வாறு ஒரு ISO இமேஜ் கோப்பாக மாற்றுவது.
3. ISO கோப்புகலாக உள்ள உங்களின் விண்டோஸ் பதிப்பை எவ்வாறு ஒரு Bootable CD/DVD யாக எழுதுவது என இந்த வீடியொவில் சொல்லி உள்ளேன். உங்களின் கேள்விகளை இங்கே கேட்கவும்.
http://sourceforge.net/projects/iso-creator-cs/

கூகுளின் DUO – VIDEO CALLING செயலி அறிமுகம்:


                               கூகுள் மே மாதம் டெவலப்பர் கான்பிரான்ஸ்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்த DUO செயலியினை இன்று பயனர்கள் மத்தியில்   முதல் முறையாக கொண்டுவந்துள்ளது.   இது ஆண்டிராய்டு மற்றும் ஐ.ஒ.ஸ் போன்ற  சாதனங்களுக்கு  சப்போர்ட் செய்கிறது.  கண்டிப்பாக மற்ற வீடியோ கால்களை விட ஒருபடி கூடுதல் செயல்களைக் கொண்டுள்ளது. இது “KNOCK KNOCK ” செயலி என்றும் அழைக்கப்படுகிறது.  அதாவது இது ஒருவர் கதவை தட்டும் போது முன்ஜாக்கிரதையாக யாரென்று பார்த்த பின்பு கதவை திறப்பதை போன்ற ஒரு  சிறிய நுணுக்கத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.


அதாவது வீடியோ காலிங்கில் ஒருவர் அழைப்பு வரும்போது கூடவே எதிர்  முனையில் இருப்பவரை நேரடியாக வீடியோ காலிங்கில் காணலாம். இதனால்  ஒருவர்  தேவையான கால்களுக்கு உடனுக்குடனும் தேவையற்ற கால்களை நிராகரிக்கவும் முடியும்.  மேலும் வீடியோ காலிங்கில்  ஒருவரின்  இணைப்பின் வேகத்தை பொறுத்து வீடியோவின்   ரிசொலூஷனையும்  தானாகவே அட்ஜஸ்ட்  செய்கிறது. மேலும் இன்னும் ஓரிரு  நாட்களில் உலகளவில் இந்த செயலி அனைவரின் மத்தியிலும் கிடைக்கும் என கூகுள் குழுவினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

Wednesday, 5 July 2017

Facebookல் Group உருவாக்குவது எப்படி?


Facebookன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லக் காரணம் அதில் உள்ள பல வசதிகள் தான். அந்த வரிசையில் Facebookன் Group வசதி மிகவும் பயனுள்ள ஒரு வசதியாகும். நண்பர்களுக்குள் ஒரு குழு உருவாக்கிக் கொண்டு நீங்கள் விருப்பபட்டதை groupல் பகிரலாம்.  எப்படி Facebookல் group உருவாக்குவது என பார்ப்போம்.
Facebookல் Group உருவாக்குவது மிகவும் சுலபமான விஷயம் மொத்தமே 2 நிமிடங்கள் தான் ஆகும்.
  • முதலில் http://www.facebook.com/login.php சென்று  facebook தளத்தை open செய்து கொள்ளுங்கள்.
  • ஒரு window open ஆகும். அதில் உள்ள Create Group என்ற பட்டனை அழுத்துங்கள்.
  • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல ஒரு Pop-up window open ஆகும். அதில் நீங்கள் ஆரம்பிக்கும் குழுமத்தின்(Group) விவரங்களை கொடுக்கவும்.
Group Name – குழுமத்தின் பெயர்
Members – இந்த பகுதியில் உங்களின் நண்பர்களை இந்த குழுமத்தில் உறுப்பினர்களாக ஆக்கலாம்.
Privacy
Open – இதை தேர்வு செய்தால் உங்களின் குழுமத்தையும், குழுமத்தில் உள்ள பதிவுகளையும் அனைவரும் பார்க்க முடியும். உறுப்பினர்களாக இல்லை என்றாலும் கூட இவைகளை பார்க்க முடியும்.
Closed – இதை தேர்வு செய்தால் அனைவரும் உங்கள் குழுமம் மற்றும் அதில் உள்ள உறுப்பினர்கள் ஆகியவற்றை பார்க்கலாம். ஆனால் குழுமத்தின் பதிவுகளை பார்க்க முடியாது. உங்கள் குழுமத்தில் உறுப்பினர் ஆனால் மட்டுமே இந்த பதிவுகளை பார்க்க முடியும்.
Secret– உறுப்பினர்கள் மட்டுமே இந்த குழுமத்தையும் குழுமத்தின் பதிவுகளையும் பார்க்க முடியும்.
இவைகளை உங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Create என்ற பட்டனை அழுத்தினால் உங்கள் குழுமம் தயாராகிவிடும். இனி அந்த குழுமத்தை உபயோகிக்க ஆரம்பியுங்கள்.

Facebookல் நம்முடைய நண்பர்கள் பகுதியை மற்றவர்களிடம் இருந்து மறைப்பது எப்படி?

புதிய நண்பர்களை கண்டுபிடிக்க இந்த Facebook தளம் மிகவும் பயன்படுகிறது. இப்படி நாம் உருவாக்கிய நண்பர்களின் List நம் Facebook கணக்கிற்கு வரும்.,  மற்றவர்களுக்கும் தெரியும் வகையில் இருக்கும். இதனை எப்படி மாற்றுவது?  நம்முடைய நண்பர்கள் பகுதியை மற்றவர்களிடம் இருந்து எப்படி மறைப்பது என இங்கு பார்க்கலாம்.
  • முதலில் உங்கள் facebook கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • அடுத்து உங்கள் கணக்கு பகுதியில் உள்ள ரகசியகாப்பு அமைப்புகள் என்பதை தேர்வு செய்யவும்.
  • அடுத்து உங்களுக்கு வேறு window open ஆகும். அதில் உள்ள Connecting On Facebook பகுதியில் உள்ள View Setting என்பதை click
    செய்யுங்கள்.
  • உங்கள் நண்பர்கள் பட்டியலை பார்க்க என்ற பகுதியில் உள்ள Tabஐ click செய்து அதில் உள்ள Customize என்பதை click செய்யுங்கள்.
  • உங்களுக்கு வேறு window open ஆகும். அதில் உங்களுக்கு தேவைக்கு ஏற்ற மாதிரி அதில் உள்ள வசதியை தேர்வு செய்து கொள்ளலாம்.
நண்பர்களின் நண்பர்கள்: இதனை தேர்வு செய்தால் உங்கள் நண்பர்கள் list உங்கள் நண்பர்கள் மட்டுமல்லாது அவரின் நண்பர்களுக்கும் தெரியும்
நண்பர்கள்  : இந்த வசதியை தேர்வு செய்தால் உங்கள் கணக்கில் உங்களோடு நண்பர்களாகி உள்ளவர்களுக்கு மட்டும் இந்த பகுதி தெரியும்.
நான் மட்டும்: இந்த வசதியை தேர்வு செய்தால் உங்களை தவிர வேறு எவரும் உங்கள்Facebook நண்பர்கள் பகுதியை காண இயலாது.
குறிப்பிட்ட நபர்கள்: இந்த வசதியானது நாம் விரும்பும் நபர்களுக்கு மட்டும் இந்த நண்பர்கள் listஐ  காண்பிக்கலாம். இதை தேர்வு செய்து வரும் கட்டத்தில் அவர்களின் பேரை குறிப்பிட்டால் அவர்களுக்கு மட்டும் நாம் காண்பிக்கலாம்.
இந்த விண்ணப்பத்தை மறைக்கவும்: என்ற பகுதியில் நீங்கள் இந்த நண்பர்கள் listஐ மறைக்க விரும்பும் நபர்களை தனித்தனியே தேர்வு செய்து கொள்ளலாம்.

Facebook-ன் Timeline தோற்றம் இப்பொழுது அனைத்து வாசகர்களுக்கும்

Facebook தளம் பல சோதனை கட்டங்களை தாண்டி Timeline தோற்றத்தை இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளுக்கும் வெளியிட்டு உள்ளது. சில மாதங்களுக்கு முன் இந்த Timeline தோற்றத்தை Developer பதிப்பாக வெளியிட்டது.  இனி அனைத்து Facebook பயனர்களும் இந்த புதிய தோற்றத்தைப் பெறலாம்.
https://www.facebook.com/about/timeline click செய்து சென்றால் வரும் windowவில் Get Timeline என்பதை click செய்யவும். (ஏற்க்கனவே இந்த Timeline வசதியை உபயோகித்து கொண்டிருந்தால் Get Timeline link வராது). ஒருவேளை பழைய தோற்றத்தை உபயோகித்து கொண்டு இருந்தும் அந்த link  வரவில்லை என்றால் ஓரிரு நாட்கள் காத்திருக்கவும்.
7-day Review Period:
இந்த புதிய timeline தோற்றத்தில் activate செய்த முதல் 7 நாட்கள் Review Period ஆகும். அதாவது இந்த 7 நாட்களுக்குள் உங்கள் Timeline தோற்றத்தில் மற்றவர்களுக்கு என்ன தெரிய வேண்டும் என்ன தெரிய கூடாது என நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
உங்களுடைய Timeline தோற்றம் உங்கள் நண்பர்களுக்கு எப்படித் தெரிகிறது என்பததையும் நீங்கள் பார்க்கும் வசதியும் உள்ளது. View As click செய்து பார்த்தல் மற்றவர்களுக்கு எப்படித் தெரிகிறது என்பதை பார்த்துக் கொள்ளலாம்.

குறிப்பிட்ட பதிவை மறைக்க:
குறிப்பிட்ட ஒரு பதிவை யாருக்கும் தெரியாமல் மறைக்கும் வசதியும் இந்த timeline தோற்றத்தில் உள்ளது.

Facebook மூலம் Video chat

பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். இதன்மூலம் நம் வேலைகளை எல்லாம் மறந்து நண்பர்களோடு அரட்டையில் மகிழ்கிறோம். இப்பொழுது மேலும் ஒரு படி மேலே சென்று நம் நண்பர்களின் முகத்தை பார்த்து கொண்டே எப்படி அரட்டை அடிப்பது என காண்போம்.
  • முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • அடுத்து இந்த லிங்கில் FACING CALL செல்லுங்கள்.
  • வரும் பக்கத்தில் உள்ள Go to App என்ற பட்டனை அழுத்தவும்.
  • அடுத்து உங்களுக்கு வேறு ஒரு பக்கம் ஓபன் ஆகும். அதில் உள்ள Allow என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.

  • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அந்த பக்கம் முழுவதும் லோட் ஆகும் வரை பொறுமை காக்கவும்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல பக்கம் திறக்கும் அதில் Allow என்ற பட்டனை அழுத்திவிடவும்.

  • அவ்வளவு தான் உங்கள் கணக்கில் வீடியோ சாட்டிங் ஆக்டிவேட் செய்யப்பட்டு விட்டது.
  • இவ்வசதியை பயன்படுத்த உங்கள் கணினியில் வெப் கேமரா அல்லது மைக்ரோபோன் வசதி இருக்க வேண்டும்.
  • இதில் உள்ள invite friends என்ற வசதி மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களை இணைத்து அவர்களோடு வீடியோ சேட்டிங்கில் பேசி மகிழலாம்.

Hack செய்யப்பட்ட Facebook கணக்கை திரும்பப் பெறுவதற்கு


Facebook தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 Hacking முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக கடவுச் சொல்லை திருடி கணக்கை முடக்கி விடுகின்றனர். அப்படி Facebook கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.
இதற்கு Facebookல் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக hack செய்யப்பட கணக்கை திரும்பப் பெறலாம். நீங்கள் Facebookல் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள். பிறகு இந்த லிங்கில் https://www.facebook.com/hacked செல்லுங்கள். உங்களுக்கு ஒரு window வரும். அந்த windowவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை click செய்யவும். உங்களுக்கு அடுத்த window open ஆகும். அந்த windowவில் உங்கள் கணக்கை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்).
மின்னஞ்சல் முகவரியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள்.
அடுத்து உங்களுக்கு இன்னொரு window open ஆகும். நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரியில் உள்ள facebook கணக்கை காட்டும்.உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த கடவுச் சொல்லை அந்த இடத்தில் கொடுக்கவும். கடவுச் சொல்லை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும். அடுத்த window open ஆகும். அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும்.
உங்களுக்கு இன்னொரு Pop-up window open ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் முகவரி மற்றும் கடவுச் சொல் கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு ஒரு window வரும். இப்பொழுது புதிய கடவுச் சொல்லை தெரிவு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் கணக்கு திரும்ப பெறப்படும். இனி நீங்கள் உங்கள் facebook கணக்கை எப்பொழுதும் போல உபயோகிக்கலாம்.

Youtube மூலம் Adsense கணக்கு உருவாக்குவது எப்படி?


சில மாதங்களுக்கு முன்பு Youtube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? என்றொரு பதிவை எழுதி இருந்தேன். இதில் பலருக்கு இருக்கும் சந்தேகம் எப்படி Adsense கணக்கை உருவாக்குவது என்று. இன்று Youtube மூலம் எப்படி Adsense கணக்கை உருவாக்குவது என்று பார்ப்போம். 

Adsense கணக்கை உருவாக்கும் முன் நீங்கள் உங்கள் வீடியோக்களை Monetize செய்ய வேண்டும். 

1. முதலில் உங்கள் Video Manager பகுதியில் இருந்து Settings என்பதை கிளிக் செய்யுங்கள். வரும் பகுதியில் CHANNEL SETTINGS என்பதில் உள்ள Monetization என்பதை கிளிக் செய்யுங்கள். 

2. இப்போது கீழே உள்ளது போல உங்கள் Youtube பக்கம் இருக்கும். அதில் உள்ள Monetize Videos என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து வரும் Pop-up விண்டோவில் Overlay in-video ads, TrueView in-stream ads என்பதை மட்டும் தெரிவு செய்து Monetize கொடுங்கள். 


3. இப்போது உங்கள் Video Manager பகுதியில் வீடியோக்களில் பச்சை நிற $ Symbol ஒன்று தோன்றி  Monetize ஆகி இருக்கும், அல்லது Under Review என்று இருக்கும்.


4. குறைந்த பட்சம் ஒரு வீடியோ Monetize என்று வரும் வரை காத்திருங்கள். அதன் பின் மீண்டும் Settings >> Monetization செல்லுங்கள். அதில் "How will i be paid" என்பதை கிளிக் செய்யுங்கள், பின் "associate an AdSense account" என்ற லிங்க் மீது கிளிக் செய்யுங்கள். 

5. அடுத்த பக்கத்தில் Next என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் Adsense Sign up பக்கத்துக்கு வந்து விடுவீர்கள். இதில் நீங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலம் Adsense கணக்கை உருவாக்கலாம். 


6. இனி நீங்கள் Adsense கணக்கை உருவாக்கி விடலாம். 

7. இந்த Adsense கணக்கு Hosted Adsense Account என்று இருக்கும். Youtube - இல் உள்ள உங்கள் வீடியோக்கள் மூலம் மட்டுமே நீங்கள் இந்த கணக்கில் சம்பாதிக்க முடியும். தளங்களில் பயன்படுத்த Adsense Settings பகுதியில் உங்கள் தள முகவரியை கொடுத்து Apply செய்து, Ad Codes-ஐ உங்கள் தளத்தில் Paste செய்ய வேண்டும். உங்கள் தளம் தகுதியானது என்றால் உங்கள் Adsense கணக்கை உங்கள் தளத்தில் பயன்படுத்த அனுமதி கிடைக்கும். 

சந்தேகம் இருப்பின் பின்னூட்டம் மூலம் கேளுங்கள். 

ஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்


ஆன்லைன் ஷாப்பிங் தான் இப்போதைய ட்ரெண்ட். கிட்டத்தட்ட நமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் நமக்கு விற்கின்றன. நிறைய தளங்கள், நிறைய பொருட்கள். எதை நம்புவது? எப்படி வாங்குவது போன்ற விசயங்களை இன்று பார்ப்போம்.

1. Return Policy 

ஆன்லைன் மூலம் வாங்கும் போது இது மிக அவசியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். ஒரு ஆடையோ, காலணியோ வாங்கும் போது அளவு சரியாக இல்லை என்றால் அதை திரும்ப அனுப்பி வேறு ஒன்றை வாங்கும் வசதி நமக்கு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வாங்கிய பொருள் வீண் தான்.

இதற்கு என்ன விதிமுறைகள் என்பதையும் அறிதல் அவசியம். பெரும்பாலும்  பொருள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வாங்கிய அன்றே அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டி இருக்கும். அதே சமயம் நீங்கள் அதை சேதாரப் படுத்தி இருக்க கூடாது.

2. Shipping Cost and Time

இது மிக மிக அவசியமாக கவனிக்க வேண்டிய விசயம். காரணம் பெரும்பாலான தளங்கள் இப்போது ஒரு டிவி வாங்கினால் கூட இலவசமாக Ship செய்கிறார்கள். இந்த சமயத்தில் shipping க்கு என்று தனியாக பணம் கட்ட சொன்னால் அந்த தளங்களை தவிர்த்தல் நலம்.

இதில் eBay மட்டும் விதிவிலக்கு, காரணம் அது ஒரு சந்தை. பொருட்களை விற்பது பல நிறுவனங்களை சேர்ந்தவர்கள். எனவே விலை குறைவாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது, Shipping க்கு கட்டணம் கேட்கவும் வாய்ப்பு உள்ளது.

பல நேரங்களில் சிறு நகரங்கள். கிராமங்கள் போன்றவற்றிற்கு குறிப்பிட்ட தளம் பொருளை நேரடியாக அனுப்ப முடியாத போது அதை Registered Post வாயிலாக அனுப்புகிறார்களா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். பெரும்பாலான தளங்கள் இதற்கும் கட்டணம் வசூலிப்பது இல்லை.

அடுத்து Shipping Time. அதிகபட்சம் 15 நாட்கள் தான் எந்த ஒரு பொருளுக்கும் Shipping Time, அதற்கு மேல் காத்திருக்க சொன்னால் நீங்கள் வேறு தளத்தில் சென்று வாங்கலாம். பெரு நகரங்கள் என்றால் 4-5 நாட்களுக்குள் பொருட்கள் கிடைத்து விடும்.

உங்களுக்கு வரும் மின்னஞ்சல் உறுதிச் செய்தியில் Expected Delivery Time என்பதை விட முன்னதாகவே பொருள் உங்களுக்கு வந்து சேர வேண்டும், இல்லை என்றால் ஏதோ பிரச்சினை என்பதை நீங்கள் உணரவேண்டும். உடனடியாக பொருள் எங்கே உள்ளது என்பதை Tracking மூலம் செக் செய்யும். இன்னும் Order Ship செய்யப்படவே இல்லை என்றால் Cancel செய்து விட்டு நேரடியாக கடையில் சென்று வாங்கி விடுங்கள்.

3. Cash Back 

ஒரு பொருளை ஆர்டர் செய்த உடன் நமக்கு அது அவசியமில்லை என்று தோன்றும் அல்லது வேறு ஒரு பொருளை வாங்க தோன்றும். அம்மாதிரியான சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கான்சல் செய்யும் வசதியை குறிப்பிட்ட தளம் உங்களுக்கு வழங்குகிறதா என்று கவனியுங்கள்.

அதோடு முழுப்பணமும் உங்களுக்கு வந்து சேரும்படி இது இருக்க வேண்டும். பெரும்பாலும் 5 முதல் 7 நாட்களுக்குள் உங்கள் பணம் திரும்ப வந்து விடும்.

4. Product Quality & Customer Review 

பெரும்பாலான தளங்கள் உண்மையான நிறுவன பொருட்களையே வழங்குகின்றன. எனவே பிரபலமான தளத்தில் வாங்கும் போது போலி பொருளோ என்ற பயம் உங்களுக்கு தேவை இல்லை.

பல தளங்கள் உற்பத்தியாளர் வாரண்டி (Manufacturer Warranty) உடன் தான் பொருளை விற்கின்றன. ஒரு குறிப்பிட்ட பொருள் சந்தை விலையை விட மிகக் குறைவாக இருந்தால் அந்த தளம் Manufacturer Warranty தருகிறதா என்று கவனித்து வாங்குங்கள். சில தளங்களில் Seller Warranty என்று இருக்கும், இதனால் ஏதேனும் பிரச்சினை என்றால் பொருளை விற்றவரிடம் தான் செல்ல வேண்டி இருக்கும். eBay தளத்தில் இதை நீங்கள் பார்க்கலாம்.

குறிப்பிட்ட ஒரு பொருள் பற்றி தெரியாமல் வாங்குகிறீர்கள் என்றால் அந்த பொருள் எந்த அளவிற்கு உபயோகமானது, அது எப்படிபட்டது போன்றவற்றை அறிய பல தளங்கள் Customer Review வசதியை கொடுத்துள்ளன. இதில் அந்த பொருளை வாங்கிய பலர் அதன் நிறை, குறைகளை பற்றி சொல்லி இருப்பார்கள். அதை கவனித்து வாங்க வேண்டும்.

குறிப்பிட்ட தளத்தின் சர்வீஸ் பற்றி அறிய இணையத்தில் தேடலாம், அல்லது ஏற்கனவே வாங்கிய அனுபவம் உள்ள நண்பர்களிடம் கேட்கலாம்.

eBay தளத்தில் பொருளை விற்பது யாரோ ஒருவர் என்பதால், குறிப்பிட்ட விற்பனையாளருக்கு வந்துள்ள Positive Feedback - ஐ பொறுத்து பொருளை வாங்கவும். இது Seller Info பகுதியில் இருக்கும்.



5. Payment Options 

ஆன்லைன் மூலம் வாங்கும் போது தற்போது பல வகையான Payment வசதிகள் உள்ளன. ஆர்டர் செய்யும் போதே Credit Card, Debit Card (ATM Card), Net Banking மூலம் பணம் செலுத்தும் வசதிகள் உள்ளன. இதில் நீங்கள் Secured ஆகத் தான் பணம் செலுத்துகிறீர்களா என்பதை கவனியுங்கள்.

பணம் செலுத்தும் பக்க URL "HTTPS" என்று ஆரம்பித்து இருக்க வேண்டும். இது உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்.வெறும் HTTP என்று மட்டும் இருந்தால், ஆர்டர் செய்வதை தவிர்க்கவும்.

இதில் பயம் உள்ளவர்கள் Cash On Delivery வசதி இருந்தால் அதை தெரிவு செய்து கொள்ளலாம். இதில் பொருள் உங்களுக்கு வந்து சேரும் நாளன்று நீங்கள் பணம் செலுத்தினால் போதும்.

EMI மூலம் வாங்கும் போது, பல தளங்கள் Processing Charge என்று ஒன்றை வசூலிக்கும். அப்போது மற்ற தளங்களில் குறிப்பிட்ட பொருளின் விலை மற்றும் EMI - யில் Processing Charge இல்லாமல் வருகிறதா என்று பாருங்கள். இதனால் உங்களுக்கு பணம் மிச்சம் ஆகும்.

6. மற்ற விஷயங்கள்

  • பொருளுக்கு வரும் இலவசங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
  • ஆர்டர் குறித்து உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை Delivery ஆகும் வரை டெலீட் செய்யாமல் வைத்து இருங்கள். 
இவையே ஆன்லைன் ஷாப்பிங் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள். வேறு ஏதேனும் உங்கள் பார்வையில் அவசியம் என்று தோன்றினால் கீழே குறிப்பிடுங்கள். 

Facebook Chat History - ஐ Delete செய்வது எப்படி?


Chat செய்வது எந்த அளவுக்கு நமக்கு உதவுகிறதோ அதே அளவுக்கு நமக்கு பிரச்சினைகளையும் கொண்டு வரும். யாரேனும் நம் அக்கௌன்ட்டை ஹாக் செய்தால் நாம் சாட் செய்த தகவல்களை அவர்கள் அறிய வாய்ப்பு உள்ளது. கடவுச் சொல் மற்றும் இன்னும் பல தகவல்கள் அதில் இருந்தால் பிரச்சினை எனவே இது போன்ற முக்கியமானவற்றை எப்படி Delete செய்வது என்று பார்ப்போம்.

1. உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து News Feed பகுதியில் Messages என்பதை கிளிக் செய்யவும்.


2. இப்போது Message பகுதி ஓபன் ஆகும். அதில் எந்த நபருடன் Chat செய்த விசயங்களை நீக்க வேண்டுமோ அவர் பெயரை தேடி கண்டுபிடிக்கவும். பின்னர் அவர் பெயர் மீதி கிளிக் செய்யவும்.


3. இப்போது அவருடன் நீங்க Chat செய்த அனைத்தும் Open ஆகும். அதில் கீழே படத்தில் உள்ளது Actions என்பதன் மீது கிளிக் செய்யவும்.



4. அடுத்து வரும் Dropdown மெனுவில் "Delete Messages" என்பதை கிளிக் செய்யவும்.


5. இப்போது உங்களிடம் Delete செய்ய அனுமதி கேட்கப்படும். குறிப்பிட்ட சில Chat களை மட்டும் Delete செய்ய அதை தெரிவு செய்து Delete கொடுக்கலாம். அல்லது அனைத்தையும் Delete செய்ய Delete All கொடுக்கலாம்.



6. ஒருமுறை இவற்றை Delete செய்தால் மீண்டும் பெற இயலாது.

வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள்.

Youtube-ல் தரம் மிகுந்த(High Quality) வீடியோக்களை மட்டும் தேட

இணையத்தில் Youtube பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. Youtube என்பது ஆன்லைனில் வீடியோக்கள் பகிரும் தளமாகும்.
இதில் பல ஆயிரகணக்கான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நல்ல தரமான வீடியோக்களும் மற்றும் தரம் குறைந்த வீடியோக்களும் கலந்து இருக்கும். நாம் ஏதேனும் வீடியோவை ஆவலுடன் தேடினால் இதில் அனைத்து தரமுள்ள வீடியோக்களும் கலந்து வரும். 
ஒரு சில வீடியோக்கள் ஆரம்பத்தில் சரியாக போகும் நடுவில் பிரச்சினையை ஏற்ப்படுத்தும். ஆகையால் நாம் தேடும் போதே தரம் மிகுந்த வீடியோக்களை மட்டும் தனியாக எப்படி தேடுவது என்று இங்கே பார்ப்போம். இதற்காக எந்த மென்பொருளும் உபயோகிக்க தேவையில்லை. 

முதலில் நீங்கள் Youtube தளத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கு youtube தளம் திறந்தவுடன் அங்கு உள்ள Search பாரில் உங்களுக்கு தேவையான வீடியோவுக்கு சம்பந்தமான வார்த்தையை கொடுக்கவும். இது நாம் அனைவரும் செய்யும் முறை. அந்த வார்த்தையை கொடுத்து சர்ச் செய்தால் அனைத்து தரமுள்ள வீடியோக்களும் கலந்து வரும். 

 இதில் தரம் மிகுந்த(High Quality) வீடிக்களை மட்டும் தனியே பிரிக்க நீங்கள் கொடுத்த வார்த்தைக்கு பக்கத்தில் '&fmt=18' (Stereo, 480 x 270 resolution) இந்த வரியை கொடுக்கவும். அல்லது '&fmt=22' (Stereo, 1280 x 720 resolution) இந்த வரியை கொடுக்கவும். 

கீழே உள்ள படத்தில் பாருங்கள். 


(or)



 உங்கள் வார்த்தைக்கும் இந்த வரிகளுக்கும் இடைவெளி விடவேண்டாம். தொடர்ந்து டைப் செய்யவும். 
 நீங்கள் தேடும் வீடியோக்களில் இந்த தரங்களில் வீடியோ இருந்தால் மட்டுமே உங்களுக்கு வரும்